free website hit counter

இத்தாலியின் லினாத்தே விமான நிலையத்திலிருந்து, சார்த்தீனியாத் தீவு நோக்கி, கடந்த ஞாயிறு பிற்பகல் பறந்த சிறிய ரக தனியார் விமானம் ஒன்று, மிலானோவுக்குச் சமீபமாக, சென் டொனாடோ நகரில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இத்தாலியில் இன்று அக்டோபர் 1 ந் திகதி வெள்ளிக்கிழமை முதல் , மின்சார கட்டணம் சுமார் 30 சதவீதம் உயர்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஒரு செய்திக்குறிப்பில் இத்தாலியின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான ஆரேரா இதனை உறுதிப்படுத்தியது.

சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 1ந் திகதி முதல் இலவச கோவிட் பரிசோதனைகள் நிறுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. அரசியற்கட்சிகள் சில இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாற்றியிருந்தன.

இத்தாலியில் அக்டோபர் 15 முதல், பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களும், தடுப்பூசி, அல்லது நொயால் மீட்கப்பட்ட நாட்டின் சுகாதார சான்றிதழை அல்லது சமீபத்திய எதிர்மறை கொரோனா வைரஸ் சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியானதும், ஆச்சரியம் தருவதுமான செய்தியொன்றினை, நேற்று அரசு அறிவித்துள்ளது. சுவிஸ் வாழ் மக்கள் பலரும் பெரும் சுமையாகக் கருதும், சுகாதார காப்பீட்டு பிரீமியங்களின் 2022 ம் ஆண்டுக்கான மாதாந்த கட்டுப்பணம் சற்றுக் குறையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனது அனைத்து விமானப் பணியாளர்களும் நவம்பர் 15 ம் திகதிக்குள் கோவிட்டுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்று சுவிஸ் தேசிய விமான நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

இத்தாலிக்குப் பயணம் செய்பவர்களுக்கு, இந்தியத் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியினை அங்கீகரித்தது இத்தாலியின் சுகாதார அமைச்சு. இது இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகவுள்ளது.

மற்ற கட்டுரைகள் …