சுவிற்சர்லாந்து மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றாளார்களாக அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில், கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விகிதம் குறைந்திருந்தது. ஆயினும் பின்னர் அந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இது குளிர் காலநிலையால் தொடரும் ஒரு போக்கு, தடுப்பூசி போடப்படாதவர்கள் உட்பட அதிகமான மக்கள் வீட்டிற்குள் இருப்பதாலும், வரையறுக்கப்பட்ட இடங்களில் வைரஸ் மிகவும் எளிதாகப் பரவுவதாலும், இந்நிலை ஏற்படுவதாக, கோவிட்-19 பணிக்குழுவின் தலைவரான தஞ்சா ஸ்டாட்லர் குறிப்பிட்டார்.
அசாஞ்சே மீதான பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்கா மனுத்தாக்கல்!
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும், அதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன் என அவர் குறிப்பிட்டார். FOPH தரவு ஏற்கனவே சுவிட்சர்லாந்து முழுவதும் அதிக எண்ணிக்கையைக் காட்டுகிறது, மத்திய மற்றும் கிழக்கு சுவிட்சர்லாந்தில், குறிப்பாக 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
அரசியலுக்கு வந்தார் தளபதி விஜய்
இது இவ்வாறிருக்க, சுவிற்சர்லாந்து அதன் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தினை நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் அதிக ஆபத்துள்ள பிரிவுகள் மற்றும் "ஓய்வு பெறும் வயதில்" உள்ளவர்களுக்கு ஷாட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான அனுமதிகோரலுக்கு , 'ஸ்விஸ்மெடிக்' இன்று ஒப்புதல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.