free website hit counter

சுவிற்சர்லாந்தில் அடுத்த இரண்டு வாரங்கள் ஓமிக்ரான் அலை உச்சத்தை எட்டும் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் தற்போதுள்ள நோய்த்தொற்றுகளில் 77 சதவீதத்திற்கு காரணமான ஓமிக்ரான் தொற்றுக்கள் ஜனவரி கடைசி வாரத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று பொது சுகாதாரத்தின் ஃபெடரல் அலுவலகத்தில் தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் விர்ஜினி மஸ்ஸேரி குறிப்பிட்டார்.

இந்த அலையின் முடிவில், சுவிற்சர்லாந்தின் மக்கள்தொகையில் 65 முதல் 85 சதவீதம் பேர் ஓமிக்ரானுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் தஞ்சா ஸ்டாட்லர் கூறினார்.

இதேவேளை சூரிச் மாநிலத்தின் சுகாதார இயக்குனர் நடாலி ரிக்லி, வரும் வாரங்களில் தினசரி 40,000 கோவிட் தொற்றுக்கள் வரை தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

டிசம்பரில், சுவிஸ் சுகாதார அதிகாரிகள் நாடு புதிய ஆண்டில் முதல் முறையாக தினசரி எண்ணிக்கைகையில் 20,000 கோவிட் தொற்றுக்களை தாண்டக்கூடும் என்று எச்சரித்தனர். ஆனால் ஜனவரி முதல் வாரத்தில், முதன்முறையாக 20,000 தொற்றுத் தடையைத் தாண்டி, 24 மணி நேரத்தில் 30,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி இறுதிக்குள் நாளொன்றுக்கு 40,000 தொற்றுக்களை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, சூரிச் சுகாதார இயக்குனர் நடாலி ரிக்லி எச்சரித்துள்ளார்,

இன்று காலை விடுமுறைகாலத்தின் பின்னதாக புதிய ஆண்டில் கூடும் நாடாளுமன்றம் கோவிட் தொற்றுக் குறித்து ஆராயவுள்ளது. பின்னர் இன்று பிற்பகலில், புதிய விதிமுறைகள் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புக்களை வெளியிடும்.

ஆண்டின் இறுதி விடுமுறை நாட்களில் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் ட்விட்டரில் புதிய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் அறிவித்தார், தொற்றுநோய்களின் அசாதாரண அதிகரிப்புக்கு பதிலளிக்கும் வகையில் "முடக்கங்களுடன் கூடிய புதிய விதிகளுடன் தயாரான தொகுப்பு" பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் குறைந்தபட்சம் இப்போதைக்கு, நடைமுறையில் உள்ள தற்போதைய கட்டுப்பாடுகளை (2G மற்றும் 2G +) ஜனவரி 24 லிருந்து, மார்ச் மாதம் வரை தொடக்கம் வரை நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தும் எனத் தெரிய வருகிறது.

மாநிலங்களின் சுகாதார இயக்குநர்கள், தனிமைப்படுத்தல் காலத்தைச் சீர் செய்யுமாறு , பெடரல் கவுன்சிலிடம் வெள்ளிக்கிழமை கடிதம் மூலம் கேட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளில் சாத்தியமான மாற்றத்தை இன்று பிற்பகலில் அரசு அறிவிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula