free website hit counter

இந்தியாவின் 77 வது குடியரசு குடியரசு தின விழாவை முன்னிட்ட சிறப்பு நிகழ்வுகள், தலைநகர்  டெல்லி கடமைப் பாதையில் நடந்தன. ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி, விழாநிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.

மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதையொட்டி, பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், “திமுக ஆட்சியை வழியனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.” என்று தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (21) இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் உரிய இராஜதந்திர வழிகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) திங்களன்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கான மதிப்பீட்டை (ஏப்ரல் 2025-மார்ச் 2026) அதன் முந்தைய கணிப்பான 6.6 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …