ஜாக்கிசானுக்கு (Jackie Chan) வயது 71. அவரது சினிமா வாழ்விற்கு இது 64 வது வருடம். எட்டு வயது முதல் சினிமாவில் பங்கு கொண்டுவரும் ஜாக்கி சான், 20 ஆம் நூற்றாண்டின் சினிமாக் கலாச்சாரத்தின் சின்னமாகவும், உலகின் மிக அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒருவராகவும், ஆசிய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமா இடையே ஒரு பாலமாகவும் விளங்குபவர்.
லோகார்னோ78' திரைப்படவிழாவின் 2ம் நாளிலும் GAZA துயரம் நினைவு கூரல் !
லோகார்னோ திரைப்பட விழாவின் 78 பதிப்பின் இரண்டாம் நாளாகிய ஆகஸ்ட் 07ந் திகதி மாலையிலும், பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் காசாவின் துயரம் நினைவு கூரப்பெற்றது.
காசாவிற்காக மனிதாபிமான ஆதரவுக் குரலுடன் ஆரம்பமாகியது லோகார்னோ78 திரைப்படவிழா !
லோகார்னோ78 திரைப்படவிழா நேற்று ஆரம்பமாகியது. இத் திரைப்படவிழாவின் சிறப்பம்சமான 'பியாற்சா கிரான்டே' பெருமுற்றத்தில், சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு, சுருக்கமான, அதேவேளை காத்திரமான கருத்துக்களடங்கிய உரைகளுடன் தொடங்கியது.
99 உலக பிரீமியர்ஸ் திரைப்படங்களுடன் 78வது லோகார்னோ திரைப்பட விழா !
78வது லோகார்னோ திரைப்பட விழா, எதிர்வரும் 06.08.2025 புதன்கிழமை ஆரம்பமாகிறது. உலகெங்கிலும் உள்ள சுயாதீன சினிமாவிற்கான ஒரு பரந்த திரைவெளியாகவும், உலகின் பிரமாண்டத் திறந்தவெளித் திரையரங்கினைக் கொண்டதும், உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கவனம் பெறும் இத்திரைப்படவிழா, ஆகஸ்ட் 6-ந் திகதி முதல் 16 வரை, சுவிற்சர்லாந்தின் தென்பகுதியிலுள்ள லோகார்னோ நகரத்தில் நடைபெறவுள்ளது.
நியோன் 56 வது சர்வதேச ஆவணத் திரைப்படவிழா இன்று ஆரம்பம் !
சுவிற்சர்லாந்தின் பிரெஞ்பகுதியிலமைந்துள்ள நியோன் நகரில் வருடந்தோறும் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச ஆவணத் திரைப்பட விழா Visions du Réel .
மயில் புலம்பல் (Peacock Lament) ஆசிய ஆபிரிக்க துயரத்தின் பதிவு !
39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் புதிய பிரிதேச பிரிவில் காட்சிப்படுத்தபட்டிருக்கும் இலங்கைப் படங்களின் வரிசையில், சிங்களமொழிப்படமான மயில் புலம்பல் (Peacock Lament) முக்கியமான ஒரு சமூகப்பிரச்சனை குறித்துப் பேசுகின்றது.
ஃப்ரிபோர்க் திரைப்படவிழாவின் காட்சி அனுபவங்களில் சில !
39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் நியூ டெரிட்டரி பிரிவில் நேற்று சில தமிழ்படங்களைப் பார்க்க முடிந்தது. இவற்றில் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள், சிவில் யுத்த தாக்கம் என்பன தொடர்பான சில படங்களையும் பார்க்க முடிந்தது.
புதிய இலங்கை சினிமா அலை !
இன்று ஆரம்பமாகும் 39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் நியூ டெரிட்டரி பிரிவு, சமகால இலங்கை சினிமாத் தேர்வின் கண்காணிப்பாளராக இலங்கைத் தமிழரான இயக்குனர் கீர்த்திகன் சிவகுமார் செயலாற்றுகின்றார். இத்திரைப்பட விழா தொடர்பாக cinebulletin இணையத்தளத்திற்காக,
கீர்த்திகன் சிவகுமாரை, அலெக்ஸாண்ட்ரே டுகோம்முன் Alexandre Ducommun செய்த நேர்முகம்,
" புலப்பெயர்வுக்கும் தேசிய வரலாற்றிற்கும் இடையிலான புதிய இலங்கை சினிமா" எனும் தலைப்பில் கடந்த பெப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. அதன் தமிழாக்கத்தினை, Alexandre Ducommun அவர்களுக்கும், cinebulletin இணையத்தளத்திற்குமான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம்.- 4Tamilmedia Team
இலங்கையர்களை வரவேற்கிறது சுவிற்சர்லாந்து !
எதிர் வரும் (2025) மார்ச் 21ந் திகதி முதல் 30ந் திகதி வரை, சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ள ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழா (FIFF) வில், இலங்கையிலிருந்து தமிழ், சிங்கள மொழிப் படைப்பாளிகளில் பலரும் கலந்து கொள்கின்றார்கள்.
சூரிச் திரைப்படவிழாவில் Little Jaffna
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லா சேப்பல் (Quartier de La Chapelle) தொழிற்புரட்சிக்கு முன்னர் ஒரு வனப்புறு கிராமம். 19 ஆம் நூற்றாண்டில் வடக்கு இரயில்வே நிறுவனம் மற்றும் கிழக்கு இரயில்வே நிறுவனங்களின் வழித்தடங்கள் திறக்கப்படவும், இப்பகுதி மக்கள் நெருக்கம் நிறைந்த நகர்பகுதியாக மாறியது என்கிறார்கள்.
மிதக்கும் நகரம் வெனிஸில் Little Jaffna
மிதக்கும் நகரம் எனப் பெருமையுற்ற வெனிஸ் நகரத்தில் லிட்டில் ஜப்னா (Little Jaffna) ஆச்சரியமாக இருக்கிறதா?. ஆச்சரியம் மட்டுமல்ல அளவற்ற மகிழ்ச்சியும் தரக் கூடிய செய்தி இது.