free website hit counter

61வது சொலொத்தூன் திரைப்படவிழா ( 21 - 28 Jan)

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.

சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சி கவுன்சிலர் எலிசபெத் பாம்-ஷ்னைடர் ஜனவரி 21, தொடக்க உரையை நிகழ்த்தி  உத்தியோகபூர்வமாக இந்த விழாவினை ஆரம்பித்து வைப்பார்கள்.  

இம்முறை மொத்தம் 164 திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் நீளத் திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தப்படுகின்றன.61வது பதிப்பிற்கெனச் சமர்ப்பிக்கப்பட்ட 478 படங்களில், கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புனைகதை மற்றும் ஆவணப்படங்கள், பல்வேறு வடிவங்கள், வகைகள் கொண்ட முழுநீளப்படங்கள் எனத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

சொலொத்தூர்ன் திரைப்பட விழாவின் முக்கியமான, "பனோரமா" பிரிவில் 93 திரைப்படங்களையும் 71 குறும்படங்களையும் காணலாம். "சோலோதர்ன் திரைப்பட விருதுகள்", "பார்வையாளர் விருது" மற்றும் "விசியோனி" ஆகிய மூன்று போட்டிகளுக்கு மொத்தம் 22 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த திரைப்பவிழாவில்,  21 உலக அரங்கேற்றங்களும் 18 சுவிஸ் அரங்கேற்றங்களும் அடங்கும்.தற்போதைய படத் தேர்வில் 68% ஆவணப்படங்களும் 32% புனைகதை படங்களும் உள்ளன, அவை சமகால சினிமாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. மேலும், 61வது சோலோதர்ன் திரைப்பட விழாவின் மூன்று போட்டிப் பிரிவுகளில், சுவிற்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியிலிருந்து 9 படங்களும், ஜெர்மன் மொழி பேசும் பகுதியிலிருந்து 11 படங்களும், இத்தாலிய மொழி பேசும் பகுதியிலிருந்து 2 படங்களும்  போட்டியிடுகின்றன.

முதல்நாளின் தொடக்கப்படமாக இயக்குனர் Stefan Haupt  நெறியாள்கையில் உருவான புனைவுச்சித்திரமான Stiller திரையிடப்படுகிறது. 2026ம் ஆண்டின் முதல்மாதத்தில் நடைபெறும் இந்தத் திரைப்படவிழாவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் முக்கியமான திரைப்பட விழாக்கள் இடம்பெறவுள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula