உலகத்தின் அமைதியை மீட்டெடுக்க ஒற்றுமையாக அனைவரும் இணையச்சொல்லும் இவ்வருட கரும்பொருளோடு உலக அமைதி நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று 24 மணி நேர அகிம்சை மற்றும் போர் நிறுத்தத்தை கடைபிடிப்பதன் மூலம் அமைதிக்கான இலட்சியங்களை வலுப்படுத்த உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அமைதியான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதற்கான உலகளாவிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இந்நாள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது டுவிட்டர் கணக்கில் இவ்வாறு பதிவு செய்துள்ளது.
"அமைதி என்பது ஒரு சாதாரணமான கனவு அல்ல. இது இருளில் வெளிச்சம். மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான ஒரே பாதைக்கு நம்மை அது வழிநடத்துகிறது."
ஒவ்வொருவரும் எவ்வாறு சிறப்பாக மீட்க உதவுவது, நெகிழ்ச்சியை எவ்வாறு உருவாக்குவது மற்றும் நமது உலகத்தை இன்னும் சமமான, நியாயமான, சமத்துவமான, உள்ளடக்கிய, நிலையான, மற்றும் ஆரோக்கியமான இடமாக மாற்றுவது எப்படி என்பதில் இவ்வாண்டு அனுசரிக்கப்படும் உலக அமைதி நாள் கவனம் செலுத்துகிறது.