free website hit counter

பன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா

கலாச்சாரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினம் வருவதற்கான காரணமாக இருந்தவர்கள் அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநரில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி 1952ஆம் நடந்த போராட்டத்தின்போது உயிர் நீத்த நான்கு மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் நினைவாக உலகம் முழுவதும் தாய்மொழி தொடர்பாக நினைவு கூறவே இந்த சிறப்புத்தினம் கொண்டாடப்படுகிறது.

யுனேஸ்கோ அமைப்பு; பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு 1999 ஆம் ஆண்டு இந்தநாளை பிரகடனப்படுத்தியது.

இந்நிலையில் எமது தாய்மொழியான தமிழ்மொழியை நினைவுகூர்ந்து கொண்டாட சென்னையில் மொழித்திருவிழா நடைபெறுகிறது. சென்னை தட்சிணா சித்ரா எனும் அருங்காட்சியகம் ஏற்பாட்டில் லாங்ஃபெஸ்ட் 2021 எனும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மாநகரத்தின் இளம் சமகால திறமைகளை ஊக்குவிக்கும் முகமாகவும் இதன் போது தமிழையும் அதன் பல அம்சங்களையும் கொண்டாடுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

தொன்மைப்பொருட்களை உள்ளடக்கிய தட்சிணா சித்ரா அருங்காட்சியத்தின் பரந்த மைதானத்தில் வார இறுதி நாட்களான பெப் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் இத்திருவிழா நடக்கிறது. நகர்ப்புற சமகால சமூகத்திற்கு தமிழ் வரலாற்றையும் மற்றும் அதனை முக்கியத்துவத்துடன் பழக்கப்படுத்தும் முயற்சியாக கையாளப்பட்டுவரும் இந்நிகழ்வுகள்; போட்டிகள், பயிற்சிகள், நேரடி கலை உருவாக்குதல் என பலப்பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

நடனம், நாடகம், இசை, இலக்கியம் மற்றும் கலை மூலம் வருடாந்திர விழாவாக ஆரம்பிக்கப்பட்ட தட்சிணா சித்ராவின் லாங்ஃபெஸ்ட் 2021 இன் முதல் பதிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அருங்காட்சியகம் “ஒரு தகவல் தரும் தளம்” என்ற கருத்தை உடைத்து நல்ல கலாச்சார அம்சங்களை வளர்க்கும் செயற்பாட்டு மையமாகவும் இருக்கும் என காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த கியூரேட்டர்கள், கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடனான கலந்துரையாடல்கள் இணையத்தள நேரடி பயிற்சிகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

மொழியின் உரை மற்றும் கலாச்சாரம், தமிழ் அடையாளம் மற்றும் சினிமா மற்றும் தொழில்நுட்பத்தில் மொழி எவ்வாறு வெளிப்படுகிறது என்பது பற்றிய குழு விவாதங்கள் முதல், தமிழ் கையெழுத்து மற்றும் நேரடி கிராஃபிட்டி; நாடக நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகள் வரை, நிகழ்வில் அம்சங்களாக கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பாடலாசிரியர் மதன் கார்கி போன்ற திரைப்பட பிரமுகர்களின் கலந்துரையாடளும் இடம்பெற்றது.

இன்று இரவு வரை முத்துக்காடு தட்சிணா சித்ரா பாரம்பரிய அருங்காட்சியகத்தில் பல்வேறு கலைஞர்கள் வழங்கவுள்ள இசை நிகழ்ச்சிகள், நேரடி நாடகநிகழ்வுகள் என மேலும் சிறப்ப அம்சங்கள் உள்ளதுடன் தமிழால் ஒற்றுபட அனைவருக்கும் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிந்துகொள்ள பேஸ்புக் பக்கம் :

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula