இந்தியாவின் முக்கியமான இந்துமத ஆன்மீகபீடமான, காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது குருமகாசன்னிதானமாக விளங்கும், ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள், இலங்கை மக்களுக்கான ஆசீர்வாதங்களுடன், இணையவழியில் சிறப்பு மிகு ஆன்மீக சற்சங்கம் ஒன்றினை இன்று 27.06.2021 ஞாயிறு மாலை நிகழ்ந்தியிருந்தார்கள்.
zoom செயலி மூலம் ஒருங்கமைக்கப்பட்டிருந்த இந் நிகழ்வில், மங்களஇசை, பூர்ணகும்பமரியாதை என்பவற்றைத் தொடர்ந்து, யாழ். பல்கலைகழக சமஸ்கிருதத் துறைப் பேராசியரும், முன்னேஸ்வர தேவஸ்தான ஆதீனகர்த்தருமான பிரம்மஶ்ரீ.பத்மநாப சர்மா அவர்களது வரவேற்புரை நிகழ்த்தி, குருமகாசன்னிதானத்தை இலங்கை மக்கள் சார்பில் வரவேற்றுக் கொண்டார்.
குருமகாசன்னிதானம் தனது உரையில், இலங்கையின் புராணகால தொடர்புகள் முதல் சமகாலம் வரையிலான சைவம் சார்ந்த பாரம்பரியங்களின் சிறப்புக்களை எடுத்தியம்பி, இது மேலும் தொடர வேண்டும் எனவும், அவ்வாறான முயற்சிகளுக்கான ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
சுவிற்சர்லாந்தில் டெல்டா மாறுபாடு நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் !
இதனைத் தொடர்ந்து, ஆன்மீகப் பெரியார்கள் பலரின் சிறப்புரைகளும், சமயாசாரப் பணிகளில் ஈடுபட்டு வரும், பெரியார்களும் அறிமுகம் செய்து வைக்கப்பெற்றார்கள். அனைவருக்கும் சுவாமிகள் நல்லாசிகள் வழங்கியருளினார்கள்.
முக்கியத்துவம் மிக்க இந்தச் சற்சங்கத்தில் சைவமக்கள் பலரும் இணைந்திருந்து மகிழ்ந்தார்கள்.