free website hit counter

அமெரிக்க உயர் விருது பெற்ற இலங்கை முனைவர் கந்தையா ரமணீதரன் !

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்காவின் முக்கியமான அறிவியல் விருது ஒன்று, இம் முறை திருகோணமலை மண்ணின் மைந்தன், திரு.கந்தையா ரமணிதரன் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பொறியியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அக்கடமியின்  (American Academy of Environmental Engineers and Scientists) AAEES எனும் கல்விக் குழுவினால், சுற்றுச்சூழல் பொறியியல் திட்டங்களுக்கான அறிவியல் கல்வியில் சிறந்து விளங்குதல்,  மற்றும் பொறியியல் துறையில் பயிற்சியாளர்களுக்கு கல்வி கற்பித்தல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தல் ஆகியவற்றிற்கான, கல்வியாளருக்கு வழங்கப்படும், 2025 ஆம் ஆண்டுக்கான விருது, இம் முறை முனைவர்.கந்தையா ரமணிதரன் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.

இவ்விருதினை நேற்றைய தினம் பெற்றுக் கொண்ட ரமணீதரன், திருகோணமலை இந்துக் கல்லூரியில் GCE(A\L) வரை கல்வி கற்று, பொறியியல் துறையில் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின் சீனாவிலும் உயர்வி கற்றவர்.  இவர்,  BSc,MSc,MS, PhD போன்ற பட்டங்களுக்கும், P.E, BCEE,BC.WRE,PH,ENV SP ஆகிய பட்டயங்களையும், F.ASCE,F.EWRI ஆகிய மேநிலை உறுப்பினரான அங்கீகாரங்களையும் பெற்றவர்களில் முக்கியமானவர். 

பொறியியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கான  எடுத்துக்காட்டுகளான, உள்கட்டமைப்பு, வடிவமைப்பு, மற்றும் திட்டத் தலைமை, என்பவற்றுடன் பொறியியல் பயிற்சியாளர்களாகப் பணியாற்றும் சுற்றுச்சூழல் தொழில்முறை பொறியாளர்களை உருவாக்கி,  அவர்களின் திறனை மேம்படுத்தும் கல்விப் திட்டத்தை உருவாக்குதல் போன்ற சிறப்புப் பணிகளுக்காக வருடங்தோறும் வழங்கப்படும்  இந்த விருதினை இம்முறை பெறுகின்ற ரமணீதரன்  ரமணிதரன் கந்தையா அவர்கள், ஓவியம் வரைதல், கவிதை, சிறுகதை, எழுதுதல், மற்றும் இலக்கியம் சார்ந்த விடயங்களில் ஆர்வங்கொண்டவர் என்தும், இவ்விருதினைப் பெறும் முதல் இலங்கையராவர்
 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula