free website hit counter

 நடை பயிற்சியில் இத்தனை விஷயங்கள் இருக்கா ?

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.

ஒருவர் 21 நாட்கள் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டால் அதனை விடவே முடியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக 20 முதல் 30 நிமிடங்கள் தினசரி நடக்க வேண்டும் என சொல்லும் மருத்துவர்கள் இது அனைவருக்கும் இது பொருந்தாது என கூறுகின்றனர். வயதிற்கு ஏற்ப ஒருவர் தினசரி நடக்க வேண்டிய நேரமானது மாறுபடும் எனவும் வயதிற்கு ஏற்ற நிமிடங்கள் தினசரி நடந்தால் மட்டுமே வாக்கிங் சென்றதன் முழு பலனையும் பெற முடியும்
என்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நடைபயிற்சி தூக்கத்தை சீராக்க உதவுகிறது. மேலும் இறுக்கமாக இருக்கும் தசைகளை தளர்த்த உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்தினால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்கிறது.இரவு உணவிற்கு பின்பு நடப்பதால் செரிமானத்தை சீராக்குகிறது. மேலும் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மாலை நேரத்தில் நடை
பயிற்சி மேற்கொள்ளலாம். இது எலும்புகளை வலுப்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். நம்முடைய உடல்நிலை, வயது, மற்றும் சக்திக்கு ஏற்ப, நடைப்பயிற்சி நேரம்
மாறுபடலாம்.

18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தினமும் 45 முதல் 60 நிமிடங்கள் வரை வேகமாக (brisk walk) நடக்கலாம். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும், கலோரி எரிப்பு அதிகரிக்கும், உடற்படியாகவும் மனதளவிலும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடப்பது போதுமானது. ஒரு சில நாட்களில் வேகமாகவும் மற்ற நாட்களில் மெதுவாகவும் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் உடல்நிலை சீராக இருக்கும், இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பு கட்டுப்பட உதவும்.

51 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் மெதுவாக அல்லது மிதமான வேகத்தில் நடக்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை. முக்கியமாக காலை நேர நடை நல்லது, ஏனெனில் அது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மெதுவாக, கவனத்துடன் நடக்க வேண்டும். சமநிலைப் பிரச்சனைகள், மூட்டு வலி போன்றவை இருப்பதால், பயிற்சி முறையாக இருக்க வேண்டும். தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் மெதுவாக நடப்பது போதும். ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் இயக்கம் சீராக இருக்கும், மனநிலை நிம்மதியாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தினமும் 5,000 அடிகளுக்கும் குறைவாக நடப்பது மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. எது எப்படியோ மிகவும் எளிதான
உயற்பயிற்சியான நடைபயிற்சியை மேற்கொண்டால் உடலும் மனமும் நலமாகும் என்றால் அது மிகையல்ல.

- வேதா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula