free website hit counter

லொகார்னோ78ல் ஆசிய திரைப்படங்கள் இரு உயரிய விருதுகளையும் வென்றன !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

16.08.2025  முடிவடைந்த 78வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவின் உயரிய விருதான Pardo Or (தங்கச்சிறுத்தை) இனை, ஜப்பானிய திரைப்படம் Tabi to Hibi தட்டிச் சென்றது.  இதன் இயக்குனர் Sho Miyake இதற்கான விருதை பெற்றுக் கொண்டார்.

உலகின் இரண்டாவது மிக நீண்ட வரலாற்றை கொண்ட திரைப்படவிழாவான லோகார்னோவில், கடந்த 10 நாட்களாக 221 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  இவற்றில் 99 திரைப்படங்கள் புதிய திரைப்படங்கள். 

எப்போதும் மாற்றுச் சினிமா, மெதுவான திரைக்கதை நகரும் திரைக்கதைகள், எந்தவொரு compromise உம் இல்லாது, இதுவரை சினிமா விம்பங்களாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் திரைப்படங்களுக்கு லொகார்னோ எப்போதும் இடம்கொடுக்கும். 

இம்முறை விருதை வென்ற ஜப்பானிய திரைப்படம் Tabi to Hibi இரு மங்கா கதைகளின் பிண்ணணியிலிருந்து உருவாக்கப்பட்டது. ஒரு கோடை காலம், இரு நபர்களுக்கான நெருக்கமான உறவு, ஒரு குளிர் காலம், அதில் அந்த இருவரில் ஒருவர். தனது வாழ்க்கை குறித்த யோசனைகளை மீள் நினைவுபடுத்துகிறார். இவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இலகுவான கதைதான் இது. 

சிறந்த இயக்குனருக்கான விருதை, ஈராக்கிய/பிரான்ஸ் இயக்குனர் Abbas Fahdel தனது « Tales of the Wounded Land » திரைப்படத்திற்காக பெற்றுக் கொண்டார். தெற்கு லிபனானில், அண்மையில் யுத்தம் நடந்த போது அங்கு அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது என்பதனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் இது. 

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில் இலகுவாக பல விருதுகளை வெல்லக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட, பிரெஞ்சு துனீசிய படைப்பான  Abdellatif Kechiche இன் « Mektoub, My Love : Canto Due » ற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. Kechiche இன் Triologie இன் கடைசிப்படமான இது, பல வருடங்களாக, நிலுவையில் காத்திருந்த படம். உடலறுவுக்காட்சிகள் வெளிப்படையாக காண்பிக்கப்படுகின்றன எனும் சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனருக்கும் இடையில் சிக்கல் இருந்தது. 

சிறந்த முதல் அல்லது இரண்டாவது முழுநீளத் திரைப்படத்திற்கான பிரிவில் தங்கச்சிறுத்தை விருதை வியட்னாம்-பெல்ஜியம்-பிரான்ஸு இணை தயாரிப்பான « Toc giay va nuoc » ற்காக இயக்குனர் Minh Quy மற்றும் Nicolas Graux பெற்றுக் கொண்டனர். ஆவணத்திரைப்பட பிண்ணனியில் ஒரு வயதான பெண்மணியின் ஞாபகங்களையும், அழிந்து போக கூடிய நிலையில் இருக்கும் மொழிகளை ஏன் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்பது குறித்து அலசும் திரைப்படம் இது. 

இப்பிரிவுக்கான நடுவர் குழுவில், பிரபல இந்திய நடிகை Kani Kusruti பங்கு பெற்றிருந்தார். Payal Kapadia வின் All we imagine as light திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடைந்த்திருந்தவர் அவர். 

Piazza Grande திறந்த வெளியரங்கில் திரையிடப்பட்ட படங்களின் சிறந்த திரைப்படத்திற்கான மக்கள் விருதை Rosemead  வென்றது. பதின்ம வயதின் வன்முறை பழக்கவழக்கங்கள் குறித்து பேசும் அமெரிக்க-ஆசிய திரைப்படமான இதில் பிரபல நடிகை Lucy Liu நடித்திருந்தார். இயக்குனர் Eric Lin இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். 

ஜேக்கி சான், Golshifteh Farahani என பல திரை பிரபலங்களுக்கு கௌரவ விருது வழங்கப்பட்ட இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில் விருதுகள் என்ற அனைத்து திரைப்படங்கள் குறித்த பட்டியலை இந்த இணைப்பில் காணலாம். நாம் பார்வையிட்ட திரைப்படங்களின் விரிவான விமர்சனங்களை தொடர்ந்து எதிர்பாருங்கள். 


https://www.locarnofestival.ch/press/press-releases/2025/08/locarno78-pardo-d-oro-to-tabi-to-hibi-sho-miyake.html


- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள்

படங்கள் நன்றி:Locarno Film Festival / Ti-Press 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula