இன்று மாலையுடன் முடிவுக்கு வந்துள்ள 77 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் மிக உயரிய தங்கச்சிறுத்தை விருதினை (Pardo d’Oro), லிதுவேனியன் இயக்குனர் Saulé Bliuvaité இன் Akiplėša (Toxic) பெற்றுக்கொண்டது. இளம் பருவ வயது பெண்களிடம் (teenage) சமூகம் முன்வைக்கும் எதிர்பார்ப்புக்கள், அழுத்தங்களை அடிப்படையாக கொண்ட இப்புனைவுத் திரைப்படம் லிதுவேனிய சினிமாவிற்கு கிடைத்த முதன்மையான ஒரு அங்கீகாரமாகும்.
சிறப்பு நடுவர் விருதினை Kurdwin Ayub இன் Mond திரைப்படம் பெற்றுக் கொண்டது. இது அதீத செல்வந்த குடும்பம் ஒன்றில் பெண்களுக்கான சுதந்திரம் என்ன என்பதனை கடும்போக்கான இஸ்லாமிய கொள்கைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரில்லர் வகை படமாகும். சிறந்த இயக்குனருக்கான விருதை Seeses (Drowing Dry) திரைப்படத்திற்காக Laurynas Bareiša பெற்றுக் கொண்டார்.
சிறந்த நடிப்புக்கான விருதையும் அத்திரைப்படம் பெற்றுக் கொண்டது. அதோடு பிரபல தென்கொரிய இயக்குனர் Hong Sangsoo’s இன் Suyoocheon திரைப்படத்திற்காக Kim Minhee வுக்கும் அவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. முதலவாது அல்லது இரண்டாவது சிறந்த முழு நீளத்திரைப்படத்திற்கான இயக்கத்திற்னாக விருது Holy Electricity திரைப்படத்திற்காக Tato Kotetishili க்கு கிடைத்தது. விருதுகள் வென்ற பல திரைப்படங்கள், மனித காருண்யம் பேசும் சமூக நீதி கொண்ட திரைப்படங்களாகும்.
லொகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குனர் Giona A.Nazzaro இம்முறை லொகார்னோ திரைப்பட விழா குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கையில், மறுபடியும் லொகார்னோ திரைப்பட விழா, சிறந்ததொரு நாளையை அமைப்பதற்கான நம்பிக்கையை அதிகம் பேசும் படங்களை கொண்டாடியிருக்கிறது. சிறந்த அறிமுக இயக்குனர் விருது, தங்கச்சிறுத்தை விருது, சிறந்த இளம் அறிமுக இயக்குனருக்கான விருது (Denise Fernades), என பல முக்கிய விருதுகள் பெண் இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது, லொகார்னோ திரைப்பட விழா எந்தளவு மாற்றுச் சினிமாவின் பெண்ணிய குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்கிறார்.
மேலும் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் அனைவரும் ஒன்றாக ஒரு சினிமா உலகில் பயணிக்க முடியும். யுத்தங்களிலிருந்தும், வெறுப்பிலிருந்தும் விலகி நிற்போம். வேற்றுமைகளிலும், ஒன்றாக பயணிக்கும் பக்குவத்தையும், பொறுப்புணர்வையும் காண்பிக்கும் சினிமாக்களை அமைக்கும் கலைஞர்களே, இதிலிருந்து விலகிவிடாதீர்கள். தொடர்ந்து இவ்வாறான படைப்புக்களை உருவாக்குங்கள் என்றார். இம்முறை லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா கொண்டாடிய முக்கிய திரைக்கலைஞர்களில் Shah Rukh Khan, Alfonso Cuaron, Jane Campion, Claude Barras, Irene Jacob, தயாரிப்பாளர் Stacey Sher மற்றும் இசைத்தொகுப்பாளர் Ben Burtt முக்கியானவர்கள்.
விருதுகள் வென்ற படங்களின் முழுத்தொகுப்பு :
Concorso Internazionale
Pardo d’Oro – Grand Prize of the Festival and City of Locarno
AKIPLĖŠA (TOXIC) by Saulė Bliuvaitė, Lithuania
Special Jury Prize – Cities of Ascona and Losone
MOND by Kurdwin Ayub, Austria
Pardo for Best Direction – City and Region of Locarno
to Laurynas Bareiša for SESES (DROWNING DRY), Lithuania/Latvia
Pardo for Best Performance
to Gelminė Glemžaitė, Agnė Kaktaitė, Giedrius Kiela, Paulius Markevičius for SESES (DROWNING DRY) by Laurynas Bareiša, Lithuania/Latvia
Pardo for Best Performance
to Kim Minhee for SUYOOCHEON (BY THE STREAM) by Hong Sangsoo, South Korea
Special Mentions
QING CHUN (KU) (YOUTH (HARD TIMES)) by WANG Bing, France/Luxembourg/Netherlands
SALVE MARIA by Mar Coll, Spain
Concorso Cineasti del Presente
Pardo d’Oro – Concorso Cineasti del Presente
HOLY ELECTRICITY by Tato Kotetishvili, Georgia/Netherlands
Best Emerging Director Award – City and Region of Locarno
to Denise Fernandes for HANAMI, Switzerland/Portugal/Cape Verde
Special Jury Prize CINÉ+
KOUTÉ VWA (LISTEN TO THE VOICES) by Maxime Jean-Baptiste, Belgium/France/French Guiana
Pardo for Best Performance
to Callie Hernandez for INVENTION by Courtney Stephens, USA
Pardo for Best Performance
to Anna Mészöly for FEKETE PONT (LESSON LEARNED) by Bálint Szimler, Hungary
Special Mentions
FEKETE PONT (LESSON LEARNED) by Bálint Szimler, Hungary
KADA JE ZAZVONIO TELEFON (WHEN THE PHONE RANG) by Iva Radivojević, Serbia/USA
Pardi di Domani
Concorso Corti d’Autore
Pardino d’Oro Swiss Life for the Best Auteur Short Film
UPSHOT by Maha Haj, Palestine/Italy/France
Special Mention
GWE-IN ESI JEONGCHE (THE MASKED MONSTER) by Syeyoung Park, South Korea
Locarno Film Festival Short Film Candidate – European Film Awards
LA FILLE QUI EXPLOSE by Caroline Poggi and Jonathan Vinel, France
Concorso Internazionale
Pardino d’Oro SRG SSR for the Best International Short Film
WASHHH by Mickey Lai, Malaysia/Ireland
Pardino d’Argento SRG SSR for the International Competition
GIMN CHUME (HYMN OF THE PLAGUE) by Ataka51, Germany/Russia
Pardi di Domani Best Direction Award – BONALUMI Engineering
QUE TE VAYA BONITO, RICO by Joel Alfonso Vargas, United Kingdom/USA
Medien Patent Verwaltung AG Award
THE FORM by Melika Pazouki, Iran
Special Mention
FREAK by Claire Barnett, USA
Concorso Nazionale
Pardino d’Oro Swiss Life for the Best Swiss Short Film
SANS VOIX by Samuel Patthey, Switzerland
Pardino d’Argento Swiss Life for the National Competition
BETTER NOT KILL THE GROOVE by Jonathan Leggett, Switzerland
Best Swiss Newcomer Award
to Gabriel Grosclaude for LUX CARNE, Switzerland
Special Mention
PROGRESS MINING by Gabriel Böhmer, United Kingdom/Switzerland
First Feature
Swatch First Feature Award
AKIPLĖŠA (TOXIC) by Saulė Bliuvaitė, Lithuania
MUBI Award – Debut Feature
GREEN LINE by Sylvie Ballyot, France/Lebanon/Qatar
Special Mentions
HANAMI by Denise Fernandes, Switzerland/Portugal/Cape Verde
KOUTÉ VWA (LISTEN TO THE VOICES) by Maxime Jean-Baptiste, Belgium/France/French Guiana
Pardo Verde
Supported by the Ente Regionale per lo Sviluppo del Locarnese e Vallemaggia
Pardo Verde
AGORA by Ala Eddine Slim, Tunisia/France/Saudi Arabia/Qatar
Special Mentions
DER FLECK by Willy Hans, Germany/Switzerland
REVOLVING ROUNDS by Johann Lurf and Christina Jauernik, Austria
- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள்
Photo Copyright: Locarno Film Festival / Ti-Press