free website hit counter

கோவை சூலூரை அடுத்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு சென்றபோது மாயமான நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

அதிகாரப்பூர்வ சுகாதார எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளை வெப்ப அலை சூழ்ந்துள்ள நிலையில், இந்த கோடையில் தென்னிந்தியாவில் இதுவரை குறைந்தது 16 பேர் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 24) தெரிவித்தனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத்  தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான தவெகவின் தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மேலும் இரு புதியவர்கள் இன்று அமைச்சர்களாக, ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.

தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பாண்மையை நிரூபித்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 9-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.

ரூபாயை நிலைப்படுத்துவதற்காக, வட்டி விகித உயர்வு, கூடுதல் நாணயப் பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து டாலர்களைத் திரட்டுவது உள்ளிட்ட தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக இவ்விவகாரம் குறித்து அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை (மே 15) நெதர்லாந்துக்கு வந்தடைந்தார்.

மற்ற கட்டுரைகள் …