இந்திய மத்திய அரசுப் பிரதிநிதிகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து, புது தில்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் இரு தரப்பினரும் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், போராட்டம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் போராட்டக்காரர்கள் அந்த இடத்தை காலி செய்யுமாறு சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் வேண்டுகோள் விடுத்தார்
இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை (FIR) திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று கூறினார். நீட் தேர்வுத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை விரைவில் நிர்ணயிப்போம் என்பது முதலான உறுதிமொழிகளை வழங்கியது மற்றும் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
