2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 இன்று ஒரு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஜோதிட சாஸ்திரங்களின்படி, பிப்ரவரி 17ஆம் திகதி செவ்வாய்கிழமை சனியின் திரிகோண இராசியான கும்பத்தில் நிகழ்கிறது.
இந்த கிரகணம் முழு சூரியனை மறைக்கும் பூரண (Total) கிரகணம் அல்ல. மாறாக, சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் வெளிப்புற ஒளியை வளையமாகத் தோற்றமளிக்கச் செய்வதால், இது “Ring of Fire” கங்கண கிரஹனம் என அழைக்கப்படுகிறது.
இந்த கிரகணம் பற்றிய விபரங்கள் Solar eclipse of February 17, 2026 எனப் பதிவாகியுள்ளது.இந்தக் கிரகணத்தின் முழு “Ring of Fire” தோற்றம் அன்டார்டிகா பகுதியில் மட்டுமே தெளிவாகக் காணப்படும். Antarctica கண்டத்தின் குறிப்பிட்ட பாதையில் மட்டுமே வளைய வடிவம் தென்படும்.
பகுதி (Partial) கிரகணம் தென்படும் பகுதிகள்:
South Africa ,Namibia, Botswana, Zimbabwe, Mozambique, Madagascar, Mauritius, Chile (தெற்கு பகுதி) இந்த கிரகணம் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியாது. Europe கண்டத்தில் இந்த நிகழ்வு கண்கூடாகப் பார்க்க முடியாது.
ஐரோப்பிய நேரப்படி (CET) Central European Time (CET – UTC+1) அடிப்படையில், கிரகண நேரம், காலை 10:56 தொடக்கம். உச்ச நேரம் மதியம் 1:12, முடிவு – மதியம் 3:27. ஆனால், இந்த நேரத்தில் ஐரோப்பாவில் கிரகணம் காணப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது நிகழும் இயற்கை வானியல் நிகழ்வாகும். அன்னுலர் கிரகணத்தில் சந்திரன் பூமியிலிருந்து சற்று தூரத்தில் இருப்பதால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது; இதனால் வளைய வடிவ ஒளி தோன்றுகிறது.
வேத ஜோதிடக் கருத்துகளின்படி, சூரிய கிரகணம் சில இராசியினருக்கு மனஅழுத்தம், வேலை மாற்றம் அல்லது உறவுகளில் சிக்கல் போன்ற விளைவுகளைத் தரலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக; கும்பம், மிதுனம், துலாம், ஆகிய இராசிகள், எதிலும் கவனமுடன் செயற்படுதல் நல்லது.
