free website hit counter

ஐரோப்பாவைக் கடந்த முழு சூரிய கிரகணம்

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் மாலை 7:23 மணிக்கு,  சந்திரன் முதன்முறையாக சூரிய வட்டத்திற்கு முன்னால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு, பகுதி கிரகணம் நாடு முழுவதும் தெரிந்தது.

சுவிற்சர்லாந்தில், பரவலாக, சூரிய கிரகணத்தின் உச்சக்கட்டம் இரவு 8:17 மணிக்கும் 8:20 மணிக்கும் இடையில் நிகழ்ந்தது. அப்போது, ​​சூரியன் சந்திரனின் ஒளியில் 90 முதல் 93 சதவிகிதத்தை மறைத்தது. 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பாவில்  நிகழ்ந்த மிகப்பெரிய சூரிய கிரகணம் இதுவாகும்.

சூரிய கிரகணத்தின் உச்சக்கட்டத்தில்,  பல இடங்களில் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கரவொலி எழுப்பினர். இரவு சுமார் 8:20 மணியளவில் சூரியன் தென்பட்டபோது, ​​அதனைச் சந்திரன் 90 வீதம் வரை மறைத்திருந்தது. 

ஐரோப்பாவில்? ஸ்பெயின், போர்த்துக்கலின் ஒரு சிறு பகுதி, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ரஷ்யாவில்,  இன்று ஒரு முழு சூரிய கிரகணம் காணப்பட்டது .1999-க்குப் பிறகு ஐரோப்பா வாழ் மக்கள் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்கள். சில இடங்களில்  ஆங்காங்கே மேகமூட்டங்கள் காணப்பட்ட போதும், பரவலாக தெளிவான காலநிலை இருந்தமையும் மக்கள் பெருமளவில் கிரகணத்தைக் கண்டு மகிழ முடிந்தது. 

ஸ்பெயினின் மேற்குக் கடற்கரையோரம் உள்ள கடற்கரைகள் மக்களால் நிரம்பி வழிந்தன; கொண்டாட்டங்களுக்காக ஏராளமான குடும்பங்கள் வந்திருந்தன, அருகிலுள்ள மதுக்கூடங்களில் இசைக்குழுக்கள் வாசித்துக் கொண்டிருந்தன, மேலும் சில இடங்களில் கிரகணத்தை மையமாகக் கொண்ட பானங்கள் வழங்கப்பட்டன.

முழு சூரிய கிரகணத்தைக் காண்பதற்கு இது ஒரு மிகச் சரியான நாளாக அமைந்துள்ளது, மேலும்  ஸ்பெயினில் கடற்கரைக்குச் செல்பவர்கள் முழு சூரிய கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர். லண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் கூடிய மக்கள் கிரகணத்தைக் கண்டுமகிழ்ந்தனர். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula