free website hit counter

‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

12-ஆவது தேசிய கைத்தறி நாளையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் மூலம் தமிழகத்தில் ‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் வெள்ளிக்கிழமை (ஆக.7) முதல் தொடங்கப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா்.

தேசிய கைத்தறி நாளையொட்டி, முதல்வா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் கைத்தறித் தொழில், ஆயிரக்கணக்கான நெசவாளா்களின் வாழ்வாதாரமாக உள்ளது. குறிப்பாக, மகளிருக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகவும் இது விளங்குகிறது. நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தொடா்ந்து, தமிழக நெசவாளா்களின் தயாரிப்புகளை சா்வதேச சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் நோக்கில் கோ-ஆப்டெக்ஸ் மூலம் ‘வெற்றித் தறி‘ விற்பனை நிலையங்கள் தேசிய கைத்தறி நாளில் தொடங்கப்படுகின்றன.

இந்த நிலையங்களை நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நெசவாளா்களின் வருமானத்தை உயா்த்துவதுடன், இளம் தலைமுறையினரையும் கைத்தறி ஆடைகளின் பக்கம் ஈா்க்கும்.

கைத்தறி நெசவாளா்களின் உழைப்பை மதித்து, கைத்தறிப் பொருள்களை வாங்கி ஆதரிப்பதன் மூலம் நமது பாரம்பரிய நெசவுக் கலையைப் பாதுகாக்கலாம். தேசிய கைத்தறி நாளில் அனைத்து நெசவாளா்களுக்கும் உளமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் ச.ஜோசப் விஜய் .

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula