free website hit counter

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் "சேயோன்". துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது.

நமது மண்சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான 'கமர்ஷியல் எண்டர்டெயினராக', 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பக் கொண்டாட்டமாக "சேயோன்" அமையும்.

அனைத்து தரப்பின் பாராட்டுதலோடு, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைவது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கைகோர்க்கும் இந்த வெற்றிக் கூட்டணி மாநில மொழி எல்லைகளைக் கடந்து புதிய உயரங்களை எட்டும் என்பதில் ஐயமில்லை.

கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் சேயோன், வலிமையான கதைக்களத்தையும் ஈர்க்கக்கூடிய திரைக்காட்சிகளையும் ஒன்றிணைக்கிறது. விரைவில் வெளியாகவிருக்கும் 'தாய்க்கிழவி' படத்தை இயக்கிய இயக்குனர் சிவகுமார் முருகேசனின் இரண்டாவது படம் இது.

முதன்முறையாக ராஜ்கமலுடனும், சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பது இத்திரைப்படத்தின் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் டர்மரிக் மீடியாவின் நவீனத்துவப் பாய்ச்சல் ஆகியவற்றுடன் உருவாகும் "சேயோன்" 2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழும்.

இப்படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியாகும் தேதி குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: