பிரபல தயாரிப்பாளரும், நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தையுமான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, சாலை விபத்தொன்றில் காலமானார். 74 வயதான அவர், தனத சொந்த ஊரான ராஜஸ்தானின் உதய்ப்பூரில் வாகனத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார்.
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
தமிழ், மலையாளம் எனப் பல்வேறு மொழிகளிலும் நூறு படங்கள் வரை தயாரித்தவர் ஆர்.பி.செளத்ரி. புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர் என அறியப்பட்டவர். நடிகர் விஜயின் ஆரம்பகால வெற்றிப்படங்கள் பலவற்றுடன் மேலும் பல சிறந்த வெற்றிப்படங்களையும் தயாரித்தவர். ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகத் திகழ்ந்த, சௌத்ரி அவர்களின் திடீர் மறைவு திரையுலகத்திற்குப் பேரிழப்பாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.