சுவிற்சர்லாந்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் சில மாநிங்களில் அதிகரித்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் அதிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிய வருகிறது.
சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர், "சுகாதார அமைப்பின் அதிக சுமைகளின் ஆபத்து மீண்டும் பல பிராந்தியங்களில் உள்ளது என்பது மிகவும் உண்மையானது" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் சுகாதா அமைப்புக்களை சிறப்புற பேணும் வகையில் விதிக்கக் கூடிய புதிய கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு இலக்காகக்கூடிய மாநிலங்கள் அனைத்தும் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளன. அங்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களின் சதவீதம் தேசிய சராசரியான 63.4 சதவீதத்தை விட மிகக் குறைவாக உள்ளது. அவ்வாறான மாநிலங்களாக, Appenzells, Glarus, Graubunden, Nidwalden, Obwalden மற்றும் Schwyz ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலேயுள்ள FOPH இன் படத்தில் குறைந்த வர்ணம் காட்டும் மாநிலங்களில் குறைவான குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதைச் குறிப்பதாகும்.
இது இவ்வாறிருக்க, Zermatt (Valais) இல் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளர் வாடிக்கையாளர்களின் கோவிட் சான்றிதழ்களை சரிபார்க்கும் கடமைக்கு பல முறை இணங்கத் தவறியதை அடுத்து, உணவகத்தின் நுழைவாயிலின் முன் சிமென்ட் கட்டைகளை நிறுவி அடைக்கும் கடுமையான நடவடிக்கையை உள்ளூர் காவல்துறை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.