இத்தாலிய செனட்டர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை, ரோம் நகரில் உள்ள செனட் சபை கட்டிடத்திற்கு 'கிறீன்பாஸ்' இல்லாமல் நுழைந்தமைக்காக, பத்து நாட்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அனைத்து பணியிடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ள கிறீன் பாஸ் இல்லாமல் செனட் சபைக்குச் சென்ற, 51 வயதான அவர் செனட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பின்னர் இத்தாலிய சுகாதார சான்றிதழான "கிரீன் பாஸ்" காட்ட மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பணி அடைநீக்கம் டிசய்யப்பட்ட அவருக்கு பத்து நாட்களுக்கான தினசரி கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கோவிட் கிரீன் பாஸ் பதிவிறக்கங்களை இத்தாலி பதிவு செய்துள்ளது. சுமார் 1,049,384 பேர் நேற்று திங்கட்கிழமை, தங்கள் ‘கிரீன் பாஸை’ பதிவிறக்கம் செய்தமை, ஒரு புதிய சாதனையைக் குறிப்பதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.