free website hit counter

Ula

Top Stories

ஒக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளும் நவம்பர் 01ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் நவம்பர் 01 ஆம் திகதி பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

இலங்கையின் திறந்த சந்தை நடவடிக்கைகளின் ஊடாக CBSL ரூபாய் 1 பில்லியன் பெறுமதியான நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளதாக அண்மையில் வெளியான செய்திகள் ‘முற்றிலும் அடிப்படையற்றவை’ என இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று நிராகரித்துள்ளது.

ஆட்சிக்கு வந்த பின்னர் பணம் அச்சடித்து புதிய கடன்களை பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்திய நடிகர் தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் அதிகாரபூர்வமாக நுழைந்துள்ளார். தொடக்க நிகழ்ச்சி அக்டோபர் 27 அன்று தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் நடைபெற்றது, இதில் ஏராளமான ஆர்வமுள்ள ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

வாழ்க்கை பாதையை அடைய பயணத்தை தொடங்கும் பாலோ கொயலோ அதில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து தந்திருக்கும் மற்றுமொரு படைப்பு (The Pilgrimage) 'தி பில்கிரிமேஜ்'. (புனித யாத்திரை)

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றினார். சிங்கள மொழியில், சுமார் 10 நிமிடங்கள்  அவர் ஆற்றிய அவ்வுரையின் தமிழ்மொழிபெயர்ப்பின் முழுவடிவம் வருமாறு.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும்  செயற்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் இம்முறை வழக்கத்துக்கு மாறாக மும்முனைப் போட்டிக்களத்தினை திறந்திருப்பதாக தென் இலங்கையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அதனை, வடக்கு கிழக்கின் அரசியல், சிவில், ஊடக வெளியும் உள்வாங்கி பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்திருப்பவர்கள், அந்த அடிப்படையை வைத்துக் கொண்டுதான் தங்களின் அரசியல் கணக்கினை போடுகிறார்கள்.

Ula

Top Stories

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள  லா சேப்பல் (Quartier de La Chapelle) தொழிற்புரட்சிக்கு முன்னர் ஒரு வனப்புறு கிராமம். 19 ஆம் நூற்றாண்டில் வடக்கு இரயில்வே நிறுவனம் மற்றும் கிழக்கு இரயில்வே நிறுவனங்களின் வழித்தடங்கள் திறக்கப்படவும், இப்பகுதி மக்கள் நெருக்கம் நிறைந்த நகர்பகுதியாக மாறியது என்கிறார்கள்.

இந்த வாரத்தில் இரசித்துச் சிரித்துப் பார்த்த படம்  'லப்பர் பந்து'. சர்வதேச திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் போதெல்லாம் தமிழில் இப்படியான படங்கள் வராதா என ஏங்கியதுண்டு.

பெண்ணிய கொள்கைகளை அழவைக்காமல் பேசிக்கொண்டு அந்ந்ந்தகாலத்தில் பெண் ஒருத்தி இருந்திருந்தால் இப்படிதான் இருந்திருப்பாள் என எதார்த்தாகமாக படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'ரகு தாத்தா'

மிதக்கும் நகரம் எனப் பெருமையுற்ற வெனிஸ் நகரத்தில் லிட்டில் ஜப்னா (Little Jaffna) ஆச்சரியமாக இருக்கிறதா?. ஆச்சரியம் மட்டுமல்ல அளவற்ற மகிழ்ச்சியும் தரக் கூடிய செய்தி இது. 

Top Stories

Grid List

உலகில் மிகப் பெரிய திரைத் தொழில் துறையான ஹாலிவுட் உட்பட பல ஊடகங்களில் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய இணைய சமூக ஊடகமாக YouTube சேனல் மாறி வருகின்றது.

நவம்பர் மாதத்திற்குரிய  பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக,  ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய  இப் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

சென்றவாரம் கூகுள் தேடு பொறியில் டூடுளில் விளையாட்டு ஒன்றை நடாத்திவிட்டிருந்ததை யாரேல்லாம் கவனித்தீர்கள்?

அனிருத் இசையமைப்பில் தீமா தீமா பாடல் கடந்தவாரம் வெளியாகி ட்ரென்டிங் ஆகிவருகிறது. 

4tamilMedia