free website hit counter

கும்பம் : ஆடி மாத ராசி பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆடி மாத  கும்ப இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

கும்பம் :(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை: ராசியில் ராகு - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சனி (வ)  - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம  ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக  ஸ்தானத்தில் சூர்யன், குரு - களத்திர  ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், கேது என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்:
31-07-2026 அன்று புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
01-08-2026 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
02-08-2026 அன்று சுக்ரன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
கும்ப ராசிக்காரர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். 

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை விழும். 

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், னைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். 

பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள். 

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

அவிட்டம் 3, 4 பாதம்:
தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை  அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள்  விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.

சதயம்:
வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்
அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப்பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 19, 20, 21; ஆக 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 09, 10

ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான தமிழ் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

           
 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast

 

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula