பன்னிரு இராசிகளுக்குமான வார (ஒக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
உறவினர்கள் மூலம் நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளைப் பற்றி இருந்து வந்த மனக்கவலை நீங்கும். வாரப் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பழைய கடன்களில் ஒரு பகுதியைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற் படும்.
தாயாரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் கூடுதல் செலவும் ஏற்படும்.வியாபாரத்தில் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும்.உங்கள் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
சந்திராஷ்டமம்: நவம்பர் 3
பரிகாரம்: விநாயகர் வழிபாடு
இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.
அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் பொறுமை அவசியம். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.மாணவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும்.
பரிகாரம்: தெட்சிணாமூர்த்தி வழிபாடு
மிதுனம்:(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவசதி போதுமான அளவு இருக்கும் என்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையுடன் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையும் அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகளும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.
அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும்.மாணவர்களுக்கு உற்சாகமான வாரம்.சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
பரிகாரம்: காளியம்மன் வழிபாடு
கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் விருப்பத்தின்படி நடந்துகொள்வார் கள். அவர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புண்டு.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். வாரப் பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.சகோதரர்களிடம் கேட்ட பண உதவி கிடைக்கும்.மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகள் பெறுவார்கள்.
பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
வியாபாரிகளுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். தொழில் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று குதூகலம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பல்வேறு விதமான பணிகளை செய்து பணியிடத்தில் பாராட்டு பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் நிதானமாக செயல்பட வேண்டும். அன்பர்கள் இந்த வாரம் புதிய தொடர்புகளால் நன்மை பெறுவார்கள். மீடியா துறையினர் புதுமையாக சிந்தித்து செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். இல்லத்தரசிகள் மனதில் இந்த வாரம் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழ்வார்கள். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு
ஜோதிடரின் சிறப்பான கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்
சிறிய விடயங்களில் கூட அதிக முயற்சி எடுத்து காரிய வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது. விடாமுயற்சி வெற்றி தரும். வியாபாரிகளை பொறுத்தவரை இந்த வாரம் எதிர்பார்த்த இலாபம் பெறுவார்கள். தொழில் துறையினருக்கு அரசு காரியங்களில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டு.
பணியிட மாற்றம் அல்லது வேறு நிறுவனத்திற்கு மாற விரும்பிய உத்தியோகத்தர்கள் மாற்றத்தை பெறுவார்கள்.கலைத்துறை அன்பர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த சந்தர்ப்பத்தை பெறுவார்கள். மீடியா துறையினர் இந்த வாரம் கஷ்ட நஷ்டம் பார்க்காமல் கூடுதலாக உழைக்க வேண்டும். இந்த வாரம் புதிய முயற்சிகளை தொடங்குவது மற்றும் இரவு பிரயாணங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் கவனச் சிதறல் ஏற்படும்.
பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு
துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்
தொழில் துறையில் இருப்பவர்கள் புதிய திட்டங்களை தொடங்குவதை இந்த வாரம் தள்ளி வைக்க வேண்டும். வியாபாரிகள் மந்தமான வர்த்தக நிலையை எதிர்கொள்வார்கள்.உத்தியோகத்தர்கள் பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான வாரம் இது. மீடியாவில் இருப்பவர்கள் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவார்கள். பெண்மணிகள் குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடு வேண்டாம்.மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை வேண்டும். வெளிநாட்டு பயணம் சிலருக்கு அமையும். வீட்டில் சுபகாரியங்கள் நடத்த முடிவு செய்வீர்கள்.
பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு நன்மை தரும் வாரம்.மாணவர்கள் சிலருக்கு வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும்.தொழில் துறையினர் பல்வேறு விதங்களில் ஆதாயம் அடைவார்கள். வியாபாரிகள் தங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பெறுவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள்.கலைத்துறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகளை பெறுவார்கள். மீடியா துறையினருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் காலகட்டம் இது. இல்லத்தரசிகளுக்கு வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு விலகும். கடன் விடயத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
உங்களுக்கு இந்த வாரம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.
சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு
மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்
ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம்.கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம்.
பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.
பரிகாரம்: நாகபூஷணி அம்மன் வழிபாடு
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்
சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பேச்சு திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சியில் தாமதங்கள் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஒக்டோபர் 29,30,31
பரிகாரம்: ஆஞ்சனேயர் வழிபாடு
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மூன்றாம் நபர் ஆலோசனை குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் ஏற்படலாம். சகோதர உறவுகள் தேவையற்ற தொல்லைகளைத் தரலாம். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம்.
யாருக்கும் நீங்கள் ஜாமீன் இருக்க வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.சகோதர உறவுகளிலும் எச்சரிக்கை தேவை. கொடுக்கல் வாங்கல் மற்றும் பிறருடைய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
சந்திராஷ்டமம்: ஒக்டோபர் 31, நவம்பர் 1,2
பரிகாரம்: மனோன்மணி அம்பாள் வழிபாடு
- 4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: