free website hit counter

சுவிற்சர்லாந்து முழுவதும் நிலவும் கடுமையான மழைவீழ்ச்சி காரணமாக ஏரிகள் மற்றும் ஆறுகள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சுவிஸ் சுற்றுச்சூழலுக்கான மத்திய கூட்டாட்சி அலுவலகம் எச்சரித்துள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், இத்தாலியின் நான்கு பிராந்தியங்களில் புதிய கட்டுப்பாடுகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில், டெல்டா பிறழ்வு வேகமாக பரவி கோடையின் முடிவில் ஆதிக்கம் செலுத்தும் என்று சுவிஸ் தொற்றுநோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். சுவிஸில் தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்களை டெல்டா பிறழ்வு கொண்டுள்ளது.

இத்தாலியில், டெல்டா மாறுபாட்டின் பரவல் காரணமாக தொற்று விகிதம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் மற்றும் உயர் சுகாதார நிறுவனம் (ஐ.எஸ்.எஸ்) ஆகியவற்றின் வாராந்திர கொரோனா வைரஸ் கண்காணிப்பு அறிக்கையின் வரைவு தெரிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒருவருக்கொருவர் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை இன்று முதல் அங்கீகரிக்கின்றன. இதற்கான உடன்பாட்டினை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யூரோ 2020 இறுதிப் போட்டி இங்கிலாந்தில் வெம்பிளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நேரில் காண இத்தாலி ரசிகர்கள் பலரும் இலண்டனுக்குப் பயணமாக விரும்பிய போதும், 1,000 ரசிகர்கள் வரை மட்டுமே இத்தாலியில் இருந்து லண்டனுக்கு பயணிக்க முடியும் என்று இத்தாலியின் கால்பந்து கூட்டமைப்பு (FIGC) தெரிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் நேற்று புதன் கிழமை மட்டும், ஏறக்குறைய 300 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த வார எண்ணிக்கையை விட கணிசமான அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …