சுவிற்சர்லாந்தில் மோசமான காலநிலை காரணமாக, ஏரிகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில், காலநிலை மாற்றங்காண்கையில் பலரும், ஏரிகள் ஆறுகளில் நீந்துவதற்கு விரும்பக் கூடும்.
ஆனால் இப்போது நீர் விளையாட்டுகளைப் பயிற்சி செய்வது உண்மையில் நல்லது இல்லை. மேலும் அது ஆபத்தானது என சுவிஸ் மீட்பு சங்கத்திலிருந்து (எஸ்எஸ்எஸ்) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
பெரு வெள்ளம் காரணமாக தற்போது நிரம்பி வழியும் ஏரிகள் மற்றும் ஆறுகளில் இருண்ட கலங்கலான நீருடன் இழுத்து வரப்பட்ட, பெரிய அளவிலான சறுக்கல் மரங்கள் மற்றும் குப்பைகள் மிதக்கின்றன. இது நீந்துவதற்கு மிகவும் மோசமான நிலை எனவும், குறிப்பிட்ட காலத்திற்கு நீச்சல் குளங்களை நாடுவது மிகவும் நல்லது எனவும், இயற்கையான ஏரிகள், நதிகளில் நீராடுவதையும், நீந்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூரிச் முதலான சில நகர நிர்வாகங்கள் இது தொடர்பிலான தடையுத்தரவுகளைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.