free website hit counter

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீர் பிரதேச அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தார். இதன்போது ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் கோவிட் -19 இன் டெல்டா திரிபு வைரஸ்சுக்கு எதிராக செயற்படக்கூடியவை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் செப். 15 ஆம் திகதிக்குள் நடத்தபடாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது. இது திமுக ஆட்சிக்கு வந்த பின் கூடும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடதக்கது.

அனைத்து நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிராத்திப்பதாக பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்டிருக்கும், தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ந் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இன்று தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கின்றார்.

மற்ற கட்டுரைகள் …