free website hit counter

இந்தியாவில் குறைந்து செல்லும் கொரோனா பாதிப்பு!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,196 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 65 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் புதிய பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 0.41 சதவீதமாகவும், வாரந்த பாதிப்பு விகிதம் 0.41 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரத்து 841 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,196 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 65 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.இதன்மூலம் குணம் அடைந்தோர் மொத்த சதவீதம் 98.74 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 26,240 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,562 குறைவு ஆகும்.

இதற்கிடையே நேற்று 4,31,973 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.26 கோடியாக உயர்ந்துள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: