free website hit counter

2001-2002 காலப்பகுதியில் இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வரும் போது, மிகப் பலமான நிலையில் இருந்தனர் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை வரும் ஒக்டோபர் 04ம் திகதி முதல் 30ம் திகதிவரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. 

தொலைக்காட்சி, அலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் சொகுசு பாவனைப் பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரும் இறப்பர் முத்திரைகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

ராஜபக்ஷக்கள்தான் இந்த நாட்டின் பெரிய சாபம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

“அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விமர்சனங்களை வெளியிடுபவர்களை மௌனமாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காகமொன்றை கொன்று, அதன் இறக்கையை தொங்கவிடவேண்டும்.” என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் …