free website hit counter

சுவிற்சர்லாந்து பேருந்தில்  தீ -ஆறு பேர் பலி, ஐந்து பேர் காயம் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தின் ​​ஃபிரிபோர்க்  மாநிலத்தில், நேற்று மாலை உள்ளூர் நேரம் 06.25 மணியளவில் ஒருபோதுப் போக்குவரத்துப் பேரூநத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 6பேர் பலியானதாகவும், 5பேர் படுகாயங்களுக்கு உள்ளதானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பேரூந்து, உள்ளூர் சேவையில்,  டுடிங்கன் (FR) பகுதியிலிருந்து கெர்சர்ஸுக்குப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. 

செய்தியாளர் சந்திப்பின் போது, ​​ஃபிரிபோர்க் மாநில காவல்துறை, இந்த விபத்தில் தீ வேண்டுமென்றே ஒரு நபரால் மூட்டப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்ககப்படுவதாகவும், ஆயினும் உடனடியாக என்ன நடந்தது என்பதை எங்களால் சரியாகக் கண்டறிய முடியவில்லை, என்றும் அதிகாரிகள் விளக்கினர். சூழ்நிலைகளை விரைவாக தெளிவுபடுத்துவதில் அனைத்து முயற்சிகளும் கவனம் செலுத்தப்படும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். 

விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி கை பர்மெலின் தனது இரங்கலைத் தெரிவித்தார். "சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்தில் மக்கள் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது," என்று அவர் X இல் எழுதினார். "காரணங்கள் கண்டறிந்து தெளிவுபடுத்தப்படும்," என்று பர்மெலின் உறுதியளித்தார், காயமடைந்தவர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் தனது ஆதரவினைத் தெரிவித்தும் உள்ளார்.

இதேவேளை இந்த விபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல் சதியாக இருக்கலாமெனும் சந்தேகங்கள் சிலவும் எழுப்பப்ட்டுள்ளன. சம்பவம் குறித்து  தகவல்களை பொதுமக்கள் அறிவதற்கு  0800 261 700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula