அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சிங்கள மற்றும் தமிழ் தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் கல்வியாண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் புதன்கிழமை (10) நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
முஸ்லீம் பாடசாலைகளின் முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.