ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமைச்சர்கள் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து, முறையான முடிவு எடுக்கப்படும் வரை அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து கட்சித் தலைமையகம் தடை விதித்துள்ளது.
SLPP தற்போது அதன் ஆதரவில் பிளவுபட்டுள்ளது. அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழியப்பட்ட வேட்புமனுவை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். அவர்களில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க மற்றும் அலி சப்ரி ஆகியோர் அடங்குவர்.
மற்றொரு பிரிவினர் சொந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அத்துடன், கட்சியின் அரசியலமைப்பை மீறி, ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் கட்சி தீர்மானித்துள்ளது.