சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி மற்றும் பழங்கள் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
“புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ கேரட்டின் விலை ரூ.5,000 ஆக உயரும் என்றும் மக்கள் கூறினர்.ஆனால் தற்போது கேரட் விலை மட்டுமின்றி அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. முட்டை விலை ரூ.75 ஆக உயரும் சிலர் சொன்னாலும், முட்டை விலையும் ரூ.40 ஆக குறைந்துள்ளது." என்றார்.
“கடந்த வருடங்களில் சிங்கள, தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது சந்தையில் இந்தப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன. ஆனால் இம்முறை அவ்வாறான விலை அதிகரிப்பு இல்லை. மேலும் உங்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வாங்கலாம்."
"இன்று, சந்தைகள் அரிசி, காய்கறிகள் மற்றும் பழங்களால் நிரம்பி வழிகின்றன. இதன் முழு பெருமையும் எங்கள் விவசாயிகளுக்குத் தகுதியானது. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளின்படி, எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும்."
ம"ே மாதத்துக்குள் முட்டையின் விலை ரூ.30 முதல் ரூ.38 வரை குறையும். இதேபோல், எங்களுக்கும் பல சவால்கள் உள்ளன,” என்று கூறிய அமைச்சர், "இவற்றையெல்லாம் சமாளித்து நாட்டில் தன்னிறைவு கொண்ட உணவு முறைமையை உருவாக்குவதே எங்கள் இலக்கு." என்றார்.