யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இந்தப் பேரூந்தில் பயணித்தவர்களில் பலரும், அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களாக இருந்தமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
த.தே.கூ.வின் தலைமைப் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை: மாவை சேனாதிராஜா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் இல்லை: தினேஷ் குணவர்த்தன
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்கும் அபாயம் இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு டிஜிட்டல் அட்டை!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற அனைத்து இலங்கையர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, தடுப்பூசி டிஜிட்டல் அட்டை (Digital Vaccine Card) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு மக்களுக்கு உரிமையுள்ளது: ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களிற்கு உரிமை உள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
கோட்டா கடற்படை முகாமுக்காக முள்ளிவாய்க்காலில் 617 ஏக்கர் காணி அபகரிப்பு: துரைராசா ரவிகரன்
“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ கடற்படை முகாமுக்காக அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.