ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.
பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலிட்பீரோ, துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியின் பதில் தலைவராக ஏப்ரல் 08 அன்று நியமித்தது. .