NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் SJB தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான உத்தேச விவாதத்தை மே 7,9,13,14 ஆம் திகதிகளில் ஒன்றில் நடத்துவதற்கு தயார் என்று தேசிய மக்கள் சக்தி (NPP) நேற்று உத்தியோகபூர்வமாக சமகி ஜன பலவேகய (SJB) க்கு அறிவித்துள்ளது.
NPP செயற்குழு உறுப்பினர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு நேற்று பிற்பகல் அனுப்பிய கடிதத்தில், விவாதத்திற்கான திகதி நிர்ணயிக்கப்படாவிட்டால், பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதல்கள் ஏற்படலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்திகதிகளில் விவாதத்திற்கு உடன்படவில்லை என்றால், உடனடியாக தமக்கு தெரிவிக்குமாறு SJBயிடம் கோரியது.