கொழும்பு தாஜ் சமுத்திரத்தில் ‘ஸ்ரீ ராமாயணப் பாதைகள்’ திட்டம் உத்தியோகபூர்வமாக 21 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதன் மூலம் இந்திய-இலங்கை கலாசார மற்றும் சமயப் பிணைப்பில் ஒரு வரலாற்று மைல்கல் குறிக்கப்பட்டது. இந்த முயற்சியானது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான சுற்றுலா முறைகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மன்னார் படுகையில் உள்ள ஆடம்ஸ் பாலம் முதல் நுவரெலியாவின் சீத்தா எலியா வரையிலான ஒன்பது புகழ்பெற்ற தளங்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான சுற்றுலா முறைகளைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்படும்.