நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் பின்தள்ளவோ அல்லது கை விடவோ மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
"நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று கிராமங்கள் சுற்றுலா மூலம் பணம் பெறுகின்றன. மேலும், விவசாய நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வலுவான ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்" என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ், முழு தீவு முழுவதையும் உள்ளடக்கிய 2.74 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் பத்து கிலோ அரிசி வழங்கப்படும்.
பதுளை மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் மொத்தம் 191,548 பயனாளி குடும்பங்கள் அரிசி மானியத்தைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் அடையாளமாக நேற்று 25 பயனாளிகளுக்கு ஜனாதிபதியின் கையால் அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.