free website hit counter

தொடரும் இங்கிலாந்தின் வேட்டை

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தொடர்ச்சியாக வெற்றிகளையே சுவைத்துக்கொண்டிருக்கும் இங்கிலாந்திற்கு இன்னுமொரு இலகுவான வெற்றி. நேற்று நடைப்பெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 141 ரன்களை எடுத்தது.

பதிலேடுத்தாடிய இங்கிலாந்து 21.5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 142 ரன்கள் எனும் வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சார்பாக பக்கர் சமான் (Fakhar Zaman) 67 பந்துகளுக்கு 47 ரன்களை எடுத்தார். மேலும் ஷதாப் கான் (Shadab Khan) 30 ரன்களையும் சொஹைப் மக்சூத் (Sohaib Maqsood) 19 ரன்களையும் மொஹமட் ரிஸ்வான் (Mohammad Rizwan) 13 ரன்களையும் சஹின் சாஹ் அப்ரிடி (Shaheen Shah Afridi) 12 ரன்களையும் மற்றையனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பாக சகிப் மஹ்மூத் (Saqib Mahmood) 10 ஓவர்களுக்கு 42 ரன்கள் ஒரு மெய்டின் ஓவர் உள்ளடங்களாக 4 விக்கெட்களை கைப்பற்றினார். கிரேக் ஓவர்டன் (Craig Overton) மற்றும் மேட் பார்கின்சன் (Matt Parkinson) இருவரும் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணிச்சார்பாக டேவிட் மலான் (Dawid Malan) 69 பந்துகளுக்கு 68 ரன்களையும் சக் கிரவ்லி (Zak Crawley) 50 பந்துகளில் 58 ரன்களையும் எடுத்து வெற்றி இழக்கை இலகுவாக எட்ட இங்கிலாந்திற்கு உதவினர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: