நிதி நெருக்கடிகள் காரணமாக பார்சிலோனா கழகம், லியோனல் மெஸ்ஸியின் புதிய ஒப்பந்தத்திற்கு இணங்காமையினால்
கழகத்தில் தொடர்ந்து மெஸ்ஸி விளையாடமாட்டார்.
லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கால்பந்து கழகத்தில் 21 வருடமாக தொடந்து விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறிருந்தாலும் இந்த புதிய ஒப்பந்தத்தில் பார்சிலோனா கால்பந்து கழகத்தினால் கைச்சாத்திட முடியவில்லை.
லியோனல் மெஸ்ஸிக்கும் பார்சிலோனா கழகத்திற்கும் இடையே ஒப்பந்தம் சம்மந்தமாக சுமூகமான ஒரு முடிவு எட்டப்படாமையினாலே இம்முடிவு எட்டப்பட்டது.
மொத்தமாக 810 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 683 கோல்கள்,10 லிகா விருதுகள், 7 கோபஸ் டெல் ரேய், 4 சாம்பியன் லீக் கிரீடங்கள் மற்றும் 3 பிபா கழக உலக கோப்பைகளை பெற்றுள்ளார்.