கோவிட்-19 பெரும் தொற்று வைரஸானது சீனாவால் தயாரிக்கப் பட்ட ஒரு உயிரியல் ஆயுதம் என அமெரிக்க முன்னால் இராணுவ அதிகாரியும் ,டாக்டருமான லாரன்ஸ் செல்லின் என்பவர் அண்மையில் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 15 ஆம் திகதி முதல் பிரான்ஸில் 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரிவாக்கப் படுவதாக பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். பிரான்ஸில் வசிக்கும் நடுத்தர வயதினரில் 50% வீதமானவர்கள் குறைந்தது 1 டோசேஜ் தடுப்பு மருந்தையாவது பெற்றுள்ளனர் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மைக் காலமாக பிரான்ஸில் தடுப்பு மருந்து விநியோகிக்கப் படும் வீதம் அதிகரித்துள்ளது. இது பிரான்ஸ் எதிர்நோக்கவிருக்கும் கோவிட்-19 பெரும் தொற்றின் 3 ஆவது அலையின் வீரியத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என்றும் நம்பப் படுகின்றது. அடுத்த வருடம் பிரான்ஸில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேபாலில் அந்நாட்டு அரசு ஜூன் 14 ஆம் திகதி வரை காத்மண்டு பள்ளத்தாக்கில் லாக்டவுனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது அங்கு அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல் படுத்தப் பட்டுள்ளது.