free website hit counter

டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசா மீண்டும் ரத்து : ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க வந்திருந்த உலகின் முன்னிலை நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஏற்பாடாகியுள்ள ஆஸ்திரேலிய டென்னிஸ் ஓபனில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்த உலகின் ‘நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை ரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.

இதனை எதிர்த்து ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மெல்போர்னில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் முடிவில் ஆஸ்திரேலிய அரசின் முடிவை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பு கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்றி வரும் ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

எனினும் குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்துள்ளார். இதனால் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்பது சந்தேகத்திற்குள்ளாகி உள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: