பராபவ தமிழ்புத்தாண்டில் மிதுன இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள் கோசார ரீதியான பொதுப் பலன்கள்.
உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும். உங்கள் தனிப்பட்ட ஜாதகரீதியான தனித்துவமான பலன்களை கீழே தரப்பட்டுள்ள ஜோதிடரின் தொடர்பு விபரங்களின் வழி. தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்:
27-06-2026 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எதிலும் நிதானத்தைக் கடைபிடித்து காரியங்களை கரை சேர்க்கும் மிதுன ராசி வாசகளே நீங்கள் எதிலும் உங்கள் அறிவை வெளிக்காட்டுபவர். உங்களுடைய சாதுர்யத்தால் காரியங்களை சாத்த்துக் கொள்வீர்கள். இன்முகம் காட்டாது அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள்.
பொருளாதாரத்தில் சிறப்பான அபிவிருத்திகள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்தவர்கள் அவற்றை நிறைவேற்றி நற்பெயர் வாங்குவார்கள். மற்றவர்களை உங்களின் வசீகரமான பேச்சினால் கவர்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவுவீர்கள். சிலருக்கு சொந்த வீடு அமைந்து புதுமனைப் புகுவிழா நடத்த வாய்ப்பு கிடைக்கும். உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். போட்டி பொறாமைகளால் பாதிப்பு வராமல் காக்கப்படுவீர்கள். இதனால் தள்ளி வைத்திருந்த விஷயங்களில் உடனடியாக முடிவெடுப்பீர்கள். உங்களிடமிருந்து விலகியிருந்த உற்றார், உறவினர்கள் நெருங்கி வந்து உறவு பாராட்டுவார்கள்.
இந்தக் காலகட்டத்தில் உங்கள் காரியங்கள் அனைத்தும் அலைச்சல் இல்லாமல் சுலபமாக முடிவடையும். ஆகார விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வயிறு உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
சிறப்பான ஜோதிடக் கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
மாற்று இனம், மதத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதியவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்தும் எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும்.
உங்களின் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். காரியங்களை அனுகூலமாக முடித்துக்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெரியோரின் துணையோடு உங்களின் செயல்களை திறமையாக முடித்து விடுவீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். கடிதப் போக்குவரத்தால் நன்மைகள் உண்டாகும். பொதுநிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடினமான வேலைகளை சரியாகத் திட்டமிட்டு முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களிடம் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.
வியாபாரிகள் இந்த ஆண்டு கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவும். எதையும் சிந்தித்து செயல்படுத்தினால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம். கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். விளை பொருட்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். புதிய குத்தகைகளை எடுக்கலாம்.
அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அவற்றில் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். திறமைகள் வெளிப்படும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள்.
பெண்மணிகள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சுமாராக இருப்பதால் சில மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். சகோதர சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்குவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள். இந்தக் காலகட்டம் முழுவதும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு தொடரும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
- காலை நேர உளவளப் பயிற்சிகள் -
மிருகசீரிஷம் - 3, 4: வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
திருவாதிரை: பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும்.
புனர்பூசம் - 1, 2, 3: பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும்
சொல்லவேண்டிய மந்திரங்கள் : ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ - என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்
மலர் பரிகாரம் : தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள், அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை, உரிய இராசிகளுக்கு மேல் அழுத்திக் காண்க:
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

