பராபவ தமிழ்புத்தாண்டில் கடக இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள் கோசார ரீதியான பொதுப் பலன்கள்.
உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும். உங்கள் தனிப்பட்ட ஜாதகரீதியான தனித்துவமான பலன்களை கீழே தரப்பட்டுள்ள ஜோதிடரின் தொடர்பு விபரங்களின் வழி. தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)
கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், ராகு பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்
27-06-2026 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்:
எதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடும் கடக ராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கி விரோதமான காரியத்தை செய்யமாட்டீர்கள். நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்குமுன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள்.
வருமானம் படிப்படியாக உயரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வெற்றிகள் குவியும். தோல்வியடையும் என்று நினைத்திருந்த காரியங்கள் வெற்றி பெறும். உற்றார் உறவினர்கள், மற்றும் நண்பர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்யம் பலப்படும். புதிய மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவிகளைப் பெற்று உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நிதி நிலைமையில் குறிப்பிட்ட இலக்கை அடைவீர்கள். சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். இழந்த சுக சௌகர்யங்களை திரும்பப் பெறுவீர்கள்.
மற்றபடி முக்கியமானவர்களிடம் கவனமாகப் பேசவும். தீயோரிடமிருந்து விலகி இருக்கவும். “கூடா நட்பு போராய் முடியும்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப உங்களுக்கு சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.
அறிவிலும், ஆற்றலிலும் சிறப்படையச் செய்யும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். புதிய உறவுகள் கிடைக்கும். நல்ல செய்திகள் வந்தடைந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
சிறப்பான ஜோதிடக் கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். சக ஊழியர்களுடன் சுமுக நிலை தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் முடியும். மற்றபடி பிறரிடம் நன்கு யோசித்துப் பேசவும்.
வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். கொடுக்கல், வாங்கல் சாதகமாக இருக்கும்.
விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் விதைத்து வளம் பெறவும். விற்பனை நன்றாக இருக்கும். கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெறுவீர்கள்.
- காலை நேர உளவளப் பயிற்சிகள் -
அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உங்களின் சிந்தனை தெளிவாக இருப்பதால் வெளிப்படையாக செயல்படுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களின் ஞாபக சக்தியும் அறிவாற்றலும் அதிகரிக்கும். பெற்றோரால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

புனர்பூசம் - 4: நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது.
பூசம்: வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசம். குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.
ஆயில்யம்: சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும்.
பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி லலிதா திரிசதி பாராயணம் செய்யவும்
மலர் பரிகாரம்: “அல்லி மலரை” அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன் தேய்பிறை: ஞாயிறு, திங்கள், வெள்ளி
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை, உரிய இராசிகளுக்கு மேல் அழுத்திக் காண்க:
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

