பராபவ தமிழ்புத்தாண்டில் ரிஷப இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள் கோசார ரீதியான பொதுப் பலன்கள்.
உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும். உங்கள் தனிப்பட்ட ஜாதகரீதியான தனித்துவமான பலன்களை கீழே தரப்பட்டுள்ள ஜோதிடரின் தொடர்பு விபரங்களின் வழி. தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், ராகு லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்
27-06-2026 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! நீங்கள் இராப்பகல் பாராமல் உழைப்பதில் வல்லவர். காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்பவர். தன்னை விட தங்கள் குழந்தைகள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புபவர்கள்.
முக்கியமான விஷயங்களில் நிதானமாக முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள். செய்தொழிலில் நிரந்தர வளர்ச்சி அடைவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒரு நியதிக்கு உட்பட்டு சிறப்பாக சிந்திப்பீர்கள். ஆர்வக் கோளாறைத் தவிர்த்து நடக்கக் கூடியவை பற்றி நேர்வழியில் சிந்தித்து செயல்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உடல் ஆரோக்யம் சிறப்பாகவே தொடரும். உங்களின் சூட்சும புத்தியால் இக்கட்டான தருணங்களிலும் சமயோஜிதமாகப் பேசி நிலைமையை சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் நடைபோடுவீர்கள். கடன் ஏதும் ஏற்படாது.
நண்பர்கள், கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து இணக்கமாகப் பழகுவீர்கள். கணவன் - மனைவிக்கு இருந்த உடல் உபாதைகள் அனைத்தும் விலகும். சுயதொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். திருமணம், மகப்பேறு போன்ற சுபகாரியங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். உங்கள் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.
பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். அவற்றிலிருந்து நிரந்தர வருமானம் வரத் தொடங்கும். நற்செயல்களைச் செய்து அதனால் வரும் வருமானத்தைக் கொண்டு சில தான தர்மங்களைச் செய்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.
உங்கள் மனம் விரும்பும் மாற்றங்களை இல்லத்திலும் தொழிலிலும் செய்வீர்கள். இதனால் புதிய வழிகளில் வருமானத்தைப் பெற முயற்சி செய்வீர்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.
சிறப்பான ஜோதிடக் கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதில் புதிய தெளிவு பிறக்கும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். அலுவலகப் பயிற்சிகளில் தேர்ச்சியடைவீர்கள்.
வியாபாரிகள் சுக சௌகர்யங்களைப் பாராமல் கடினமாக உழைப்பீர்கள். ஆனாலும் போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள நேரிடும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். உங்களின் நேரடிப் பார்வையிலேயே பண விஷயங்களைக் கையாளவும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் கிடைத்து நீர்வரத்து உயரும். புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். பால் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். வழக்குகள் சுமுகமாக முடியும்.
அரசியல்வாதிகள் கட்சியில் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனாலும் தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்துகொள்வார்கள். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுத்திக்கொள்வீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்துவீர்கள்.
கலைத்துறையினருக்கு அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். உங்களைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை சரியாக வெளிப்படுத்துவீர்கள். பொருளாதார வசதிகள் உயரும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.பெண்மணிகள் ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். முக்கிய முடிவுகளை யோசித்து எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைச் செய்ய வேண்டாம்.
மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
- காலை நேர உளவளப் பயிற்சிகள் -
கார்த்திகை - 2, 3, 4: செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
ரோகினி: வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.
மிருகசீரிஷம் - 1, 2: வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும்.
பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். அவளுக்கு மஞ்ச வஸ்திரம் கொடுத்து அணிவியுங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி 21 முறையாவது "ராம' நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ ”சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும்.
மலர் பரிகாரம்: “மல்லிகை மலரை” சிவனுக்கு பிரதோஷ வேளையில் சாத்திவர குழப்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், புதன், வெள்ளி தேய்பிறை: புதன், வெள்ளி
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை, உரிய இராசிகளுக்கு மேல் அழுத்திக் காண்க:
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

