free website hit counter

இஸ்லாத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வெ.கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குரகல விகாரை தொடர்பில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியமைக்காக ஞானசார தேரருக்கு 100,000 ரூபா தண்டம் செலுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே மேலும் உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 1, 2016 மற்றும் டிசம்பர் 16, 2016 க்கு இடையில் கிருலப்பனையில் இஸ்லாமிய மத நம்பிக்கைகளை அவமதித்து, இஸ்லாமிய மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில் ஞானசார தேரர் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் கருத்தை வெளியிட்டதாக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula