free website hit counter

வந்துள்ள எரிவாயு மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சில நாட்களுக்கு முன்னர் டொலர்களை வழங்கிய பின்னரே நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுமார் 200 மெற்றி தொன் எரிவாயுவை தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறது. மீதமுள்ள எரிவாயு 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.5 கிலோ கிராம் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

ஒரு தொன் எரிவாயு மூலம் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட 80 கொள்கலன்களை மாத்திரமே நிரப்ப முடியும். கொள்கலன்களின் அளவுக்கு அமைய ஒரு தொன் எரிவாயு நிரப்பபடும் கொள்கலன்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.

லிட்ரோ நிறுவனம் விநியோகித்துள்ள பல அளவுகளிலான 70 லட்சம் கொள்கலன்கள் விற்பனை முகவர்கள் மற்றும் மக்களிடம் உள்ளன. இவற்றில் 55 லட்சம் கொள்கலன்கள் 12.5 கிலோ கிராம் கொள்ளவை கொண்டவை எனவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: