தொலைக்காட்சி, அலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் சொகுசு பாவனைப் பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அலைபேசிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், இதர சில மின்சாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் போன்ற பொருட்களின் இறக்குமதிக்கு இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிந்துள்ளது.
நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணயம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், உள்நாட்டு உற்பத்திகளுக்கு சந்தையில் வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் இந்தக் கட்டுப்பாட்டை விதிக்க தீர்மானித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    