இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.
கொரோனா தொற்றால் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    